அணுஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிறுத்த வேண்டும்: ஐ.நா.

By ஏஎஃப்பி

சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள அணுஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று "புக்குக்சோங்-2 என்ற ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை 500 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா தனது போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கூறியுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டிபனே டுஜாரிக் கூறும்போது, "வடகொரியாவின் இந்தத் தொடர் அணுஆயுத சோதனைகள் கொரிய பிராந்தியம் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள ஆரோக்கியமான பேச்சு வார்த்தைக்கு அந்நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவின் சமீபத்திய அணுஅயுத ஏவுகணை சோதனைகள் குறித்து ஆலோசனை நடத்த அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆனால், தங்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே, அணுஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்துவதாக வடகொரியா தரப்பில் தொடர்ந்து கூறிவருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. தலைமையில் இம்மாதத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்