இராக் தலைநகர் பாக்தாதில் திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்ததில் 26 பேர் பலியாகினர். மேலும் 96 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இராக் மற்றும் சிரியாவில் ஷியா பிரிவு மக்கள் மீது தொடர்ச்சியாக சன்னிப் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பாக்தாத் நகரில் உள்ள பலதியாத் பகுதியில் உணவகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் நிரப்பப்பட்ட கார் முதலில் வெடித்து சிதறியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், அடுத்த அரை மணி நேரத்தில் சிலேக் என்ற இடத்திலும், கரடாவில் உள்ள திரையரங்கம் அருகேயும் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தது.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சதியில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 96 பேர் காயமடைந்ததாகவும் பாக்தாத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஐ.நா. அறிக்கையின்படி இராக் உள்நாட்டு கிளர்ச்சித் தாக்குதலில் கடந்த ஒரு ஆண்டின் ஒரு பாதியில் மட்டும் 5,576 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 11,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago