பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தை அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தண்டனை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சட்டத்துக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது குறித்த விவரம்:
பாகிஸ்தானின் இட்டான் வாலி கிராமத்தை சேர்ந்தவர் அசியா பிபி. கிறிஸ்தவரான இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள ஒரு பண்ணையில் பணியாற்றி வந்தார். அங்கு முஸ்லிம் பெண்களுடன் சேர்ந்து தண்ணீர் எடுக்கும்போது அவர்களது பானையை தொட்டதாக தெரிகிறது. பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பாத்திரத்தை கிறிஸ்தவர்கள் தொட தடை உள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் பெண்களுக்கும் அசியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தங்கள் மதத்தை அசியா அவதூறாக பேசியதாக முஸ்லிம் பெண்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அசியா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 2009-ம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து அசியா சார்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதிலும் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதற்கு சர்வதேச அளவில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள மத அவதூறு சட்டத்தை நீக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத அவதூறு பேச்சுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஜியாஉல் ஹக் 1980-ம் ஆண்டுகளில் கொண்டு வந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago