எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக புரட்சி வெடித்ததன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது, அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப் பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 49 பேர் பலியாயினர்.
முபாரக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைக் கொண்டாடும் வகையில், தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கம் உட்பட அந்நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் ராணுவ ஆதரவு பெற்ற அரசின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சனிக்கிழமை கூடினர்.
அந்த நாட்டின் தேசியக் கொடி மற்றும் பதாகைகளுடன் பேரணியாக சென்ற அவர்கள், அதிபர் தேர்தலில் ராணுவ தலைவர் ஜெனரல் அப்துல் பட்டா அல்-சிசி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதேநேரம், முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி ஆதரவாளர்கள் கெய்ரோ மற்றும் பிற நகரங்களில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீ ஸார் விரட்டி அடித்தனர்.
எனினும், அரசு ஆதரவாளர் களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மின்யா, கிஸா, அலெக் சாண்ட்ரியா உள்ளிட்ட பல இடங் களில் மோதல் வெடித்தது. சில நகரங்களில் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது அரசு எதிர்ப்பாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த மோதலில் 49 பேர் கொல்லப்பட்டதாகவும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது. எனினும், 50 பேர் பலியானதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஷேக் ஜுவைத் நகருக்கு அருகே ஒரு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர், அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
முபாரக்குக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி மோர்ஸி அதிபரானபோதும், அவருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் கடந்த ஜூலை மாதம் அவரது பதவியை ராணு வம் பறித்தது. அதன் பிறகு முஸ்லிம் அமைப்பினருக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago