சிரியாவில் குர்து இன மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து துருக்கி விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் ஜராபலஸ் மற்றும் அலெப்போ புறநகர்ப் பகுதிகளில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களிடம் தனியாக ராணுவப் படை உள்ளது. அந்தப் படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
துருக்கியில் அரசுக்கும் தடை செய்யப்பட்ட குர்து தொழிலாளர் கட்சிக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. துருக்கியில் நிகழ்த்தப்படும் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு குர்து தீவிரவாதிகளே காரணம் என்று அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்தப் பின்னணியில் சிரியாவில் குர்து இன மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து துருக்கி விமானப் படை சில நாட்களாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. தரைமார்க்கமாக துருக்கி அரசு ஆதரவு பெற்ற புரட்சிப் படை வீரர்களும் குர்து படையினருக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.
சிரியாவின் ஜராபலஸ், அலெப்போ புறநகர்ப் பகுதிகளில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க கூட்டுப் படையான நேட்டோவில் துருக்கி அங்கம் வகிக்கிறது. இருப்பினும் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே விரிசல் அதிகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago