இலங்கையில் தொடர் மழையை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 250 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள மத்திய இலங்கை பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் நிறைந்த மலைகிராம பகுதிகளில் நேற்று (செவ்வாய்கிழமை) திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த 140 வீடுகள் மன்ணுக்குள் புதைந்தன. சம்பவ பகுதியில் பேரிடர் மீட்பு குழு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் அந்த குழுவோடு ராணுவமும் இணைந்துள்ளது.
இதில் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் கிராம மக்கள் சுமார் 250 பேர் குறித்த நிலை அறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான தொடர் மழையால் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் நிலச்சரிவு ஏற்படலாம் என்று அஞ்சக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago