எகிப்த்தின் சினாய் தீபகற்பத்தில் அடுத்தடுத்து பல இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்த்து நாட்டின் சினாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடிகள் மீது வெள்ளிக்கிழமை அன்று வெடிகுண்டுகளை நிரப்பிய காரை கொண்டு ஏற்றி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை அடுத்து தொடர்ந்து சாலை ஓரங்களில் அடுத்தடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரேணேட் குண்டுகளும் அடுத்தடுத்து பயங்கரவாதிகளால் வெடிக்க செய்யப்பட்டது. ஆங்காங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
போர் களம் போல காட்சியளித்த சினாயில், தொடர் தாக்குதல் சம்பவங்களில் பலர் சிக்கி கொண்டனர். இதுவரை இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆகவும், 29 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்று கொள்ளாத நிலையில், இது போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதல் கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் நடந்ததில்லை என்று எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் எகிப்து நகரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எகிப்த்தின் சினாய் தீபகற்பத்தில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago