உக்ரைன் பிரச்சினை: ரஷ்ய அதிபருடன் ஒபாமா ஆலோசனை

By செய்திப்பிரிவு

உக்ரைன் நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, உக்ரைன் அரசும் அந்நாட்டு பிரதான எதிர்கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

உக்ரைன் நாட்டில் ஒரு பகுதியைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் அரசு, ரஷ்யாவுடன் பலமான நட்புறவு கொண்டுள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரை அரசின் நிலைப்பாட்டை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன.

இதன் காரணமாக, உக்ரைன் அதிபர் பதவி விலகக்கோரி கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெறும் கலவரங்களில் பலர் பலியாகினர்.

இத்தகையச் சூழலில் உக்ரைன் அரசும், எதிர்கட்சியும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ள நிலையில் இது குறித்து ஒபாமா - புடின் ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்