உலக சினிமாவின் 'மாபெரும் மேதை' எனப் புகழப்பட்ட ஈரானிய திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்ட்டாமி பிரான்ஸில் காலமானார். அவருக்கு வயது 76.
கியரோஸ்ட்டாமி 1997-ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் டேஸ்ட் ஆப் செரி என்ற ஈரானிய படத்திற்காக சிறந்த படத்திற்கான பாம் டி'ஓர் விருது பெற்றார். 1960களின் பிற்பகுதியில் தொடங்கிய ஈரானிய நியூவேவ் திரைப்படங்களோடு தொடர்புப் படுத்தப்படும் கியரோஸ்ட்டாமி பின்னர் உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்து விளங்கினார்.
அவர் உருவாக்கிய திரைப்படங்களுக்கான காட்சிரீதியான திரைமொழியோடு, சாதாரண மக்கள் வாழ்வில் புழங்கிய கவித்துவமான உவமைகளையும் இணைத்தது அவர் படங்களுக்கு தனிச்சிறப்பை வழங்கியது. பிரான்ஸ் திரைப்பட பிதாமகன் கோடர்ட் ஒருமுறை கூறினார் "திரைப்படம் டி.டபிள்யூ.கிரிஃபித்துடன் ஆரம்பிக்கிறது. அப்பாஸ் கியரோஸ்ட்டாமியோடு முடிவடைகிறது'' என்று.
திங்கள்கிழமை மாலையில் கியரோஸ்ட்டாமி புற்றுநோயால் அவதியுற்று உடல்நலம் குன்றி இறந்தார் எனவும், குடல்நோய் தாக்கி அவர் மரணமடைந்தார் எனவும் ஈரானிய ஊடகங்கள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளன.
பாரீஸில் உள்ள தனது வீட்டிலிருந்து பிப்ரவரி ஏப்ரல் மாதங்களுக்கிடையில் சில சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஈரானுக்கு வந்ததவர் மேலும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள கடந்தவாரம் பிரான்ஸ் திரும்பினார்.
அவரது மரணம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவட் ஜாப்ஃரி, ''ஈரான் சர்வதேச சினிமாவின் உன்னதமான மேதையை இழந்துவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய பிரபல திரைப்பட இயக்குநர்கள் அஷ்கார் ஃபார்ஹாதி பிரிட்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ''பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் சாதாரண திரைப்பட இயக்குநர் இல்லை. சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நவீன தொன்மமாக அவர் இருந்தார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரீஸிலிருந்து கியரோஸ்ட்டாமியின் உடலை தாய்நாட்டுக்குக் கொண்டுவர இயக்குநர் ரேஸா மிர்காரிமி உள்ளிட்ட ஈரானிய திரைப்பட உலகத்தைச் சார்ந்த பல்வேறு இயக்குநர்களும் உதவியாக இருந்ததாக ஐஎஸ்என்ஏ தெரிவித்துள்ளது.பல்வேறு அச்சுறுத்தல்களையும் கடந்து ஈரானிய சமூக வலைத்தளங்களில் அப்பாஸ் கியரோஸ்ட்டாமி புகழ்மிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சசியிடமிருந்து விருதுபெறும் படங்கள் பகிரப்பட்டுவருகின்றன. மார்ட்டின் ஸ்கார்சசி ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்.
ஆஸ்கர் விருது வழங்கும் குழுவின் பன்முகத் தன்மையை அதிகரிக்கும்விதமாக கடந்த வாரம்தான் கியரோஸ்ட்டாமியையும் நீதிபதியாக சேர்த்துக்கொள்ள ஹாலிவுட் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
நட்சத்திர அந்தஸ்து உயர்வு
ஈரானின் தலைநகரத்தில் 1940 ஜூன் 22ல் பிறந்த கியரோஸ்ட்டாமி டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஓவியம் பயின்றவர். தனக்கென்று ஒரு வேலையைத் தேடுவதற்கு முன் அவர் வடிவமைப்பாளராகவும் விளம்பரப் படங்களை இயக்குநராகவும் இருந்தார்.
1969ல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான அறிவுசார் வளர்ச்சி மையத்தின் திரைப்படப் பிரிவில் துறைத் தலைவராக பணியாற்றினார். அதன்பின்னர்தான் தான் சொந்தமாக திரைப்படங்களை இயக்குநவதற்காக அந்த வேலையையும் துறந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது முதல் குறும்படம் 'பிரெட் அன்ட் அலே'வை இயக்கி அதன்பின்னரே முழுநீளத் திரைப்படமான 'தி ட்ராவலர்' வெளிவந்தது. அப்படம் ஈரானிய ரியலிச திரைப்படங்களுக்கான முன்னோடிப் படமாக விளங்கியது.1979 ஈரானில் ஏற்பட்ட அரசியல் புரட்சியைத் தொடர்ந்து அவரது படங்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. இதன்பிறகு அவரது படங்கள் அரசியலை நேரடியாக பேசாமல் சாதாரண மக்களின் வாழ்க்கையை தத்துவார்த்த கதைகளாகச் சொல்லத் தொடங்கின. அவர் ஈரானின் கலாச்சார வளங்களை தொடர்ந்து போற்றிவளர்த்த கலாச்சாரத் தூதுவராகவும் அவர் விளங்கினார்.
ஒருபுறம், ஒரு நாட்டின் திரைப்படமாக அதிகாரிகளின் உத்தரவோடு நிதியுதவி வழங்கப்படுகிறது. சுயாட்சித் தன்மையோடும் ஒரு திரைப்படம் தன்னளவில் செழித்தோங்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்று ஒருமுறை அவர் கூறியுள்ளார்.
கோகெர் டிரையாலஜி எனக் கூறப்படும் அவர் இயக்கிய மூன்று தொடர்புடைய வெவ்வேறு திரைப்படங்களே அவரை உலக அரங்கில் நிலைநிறுத்தியது. 1987ல் வெளிவந்த 'வேர் இஸ் த மை ஃப்ரண்ட்ஸ் ஹோம்.' திரைப்படத்திலிருந்துதான் ட்டிரையாலஜி தொடங்கியது.
ஆரவாரமற்ற பாணி, சிக்கலான யதார்த்தம், நுட்பமான நகைச்சுவைக்காகவென்றே அவரது படங்கள் கொண்டாடப்பட்டன. திரைக்கதைக்கு ஏற்ற உண்மையான இடங்களையே தனது படப்பிடிப்புக்கு அவர் தேர்வு செய்தார். அது மட்டுமின்றி சினிமாவுக்கென உள்ள நட்சத்திரங்களை விட்டுவிட்டு மிக சாதாரண மனிதர்களையே தனது சினிமாவுக்கான முகங்களாக கொடுத்தார்.
சிறந்த இயக்குநருக்கான விருதை 1997ல் அவர் பெற்ற தருணத்தில் பிரெஞ்சு திரைப்பட நடிகை காதரீன் டினேவெ கியரோஸ்ட்டாமிக்கு முத்தம் கொடுத்ததற்காக ஈரானிய பழைமைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
அதன்பின்னர் அவர் எடுத்த 'தி வின்ட் வில் கேரி அஸ்' திரைப்படமே வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதைப் பெற்றுத் தந்தது. அதன்பின்னர் அவர் பலநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத்தாலியைப் பின்புலமாகக் கொண்ட சர்டிபைடு காபி, ஜப்பானில் நடைபெறும் 'சம்ஒன் இன் லவ்' போன்ற படங்களையும் அவர் எடுத்தார்.
உலகப் பயணங்களை மேற்கொண்ட கியரோஸ்ட்டாமி சினிமா வழியாக பல்வேறு நாடுகளின் கதைகளை சொல்லத் துணிந்ததைப் பற்றி சொல்லும்போது ''உலகளாவிய மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் அணுகத் தகுந்தவர்கள்தான்'' என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago