தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் அடுத்த வாரம் தலைநகர் பாங்காக்கை முடக்கும் போராட் டத்தை அறிவித்துள் ளனர். இதற்கு ஆதரவு கோரி போராட்டக்குழு தலைவர் சுதெப் தவுக்சுபன் நடத்தும் போராட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.
தாய்லாந்தில் பிரதமர் இங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி அரசு எதிர்ப்பாளர்கள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தலைநகர் பாங் காக்கை முடக்கும் போராட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் நிதி திரட்டும் விதமாக போராட்டக்குழு தலைவரும், மக்கள் ஜனநாயக மறுசீரமைப்புக் குழு தலைவருமான சுதெப் தவுக் சுபன் பேரணி நடத்தி வருகிறார்.
சாவோ பிரயா நதிக்கரையில் சுதெப் வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.
பாங்காக்கை முடக்கும் போராட்டத்தில் பாங்காக் வாசிகளைப் பங்கேற்கச் செய்யும் விதத்தில் இப்பேரணி நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது, சுதெப் தவுக்சுபன் 11 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டார். பேரணியின்போது, மக்கள் போராட்டத்துக்கு நிதியளித்து ஆதரவு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
38 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
13 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago