ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

By ராய்ட்டர்ஸ்

ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய அவசரநிலை சேவைகள் இதுகுறித்து கூறும்போது, இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

“சென்னாயா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த போது இரு ரயில் நிலையங்களுக்கு இடையே குண்டு வெடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனச் செய்தி கூறுகிறது.

சென்னாயா பிளோஷ்சாத் ரயில் நிலையத்தில் 8 ஆம்புலன்ஸ்கள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

பெலாரஸ் தலைவர் அலெக்சாந்தர் லுகாஷெங்கோவுடன் சந்திப்புக்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வந்துள்ள அதிபர் விளாதிமிர் புதின், குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்றார். தீவிரவாதக் கோணங்களிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் ரத்தம் வழிய ரயில் நிலைய நடைமேடையில் இருந்ததை வீடியோ ஒன்று காட்டியுள்ளது. நடைமேடையில் பெரும்புகைகளுக்கு இடையே பலர் வெளியேற முயற்சி செய்து கொண்டிருந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

இதனையடுத்து நகரில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.

செச்சன் போராளிகள் ரஷ்யாவைத் தாக்கி வருவது வழக்கம். எப்போதும் மேலும் தாக்குதல்கள் நடக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை கொடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

2010-ல் மாஸ்கோ மெட்ரோ ரயில்களைக் குறிவைத்து இரண்டு பெண் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்திய போது 38 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

11 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்