லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஏமன் உள்நாட்டுப் போரினால் அவலம்

By ஏஎஃப்பி

ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரின் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது,

ரோவ அகமத் (12) என்ற சிறுமியின் கல்வி பயிலும் கனவு, அவளது பள்ளிக்கூடம் வான்வழித் தாக்குதலால் தகர்க்கப்பட்டபோது முடிவுக்கு வந்தது. ஆனால் அவள் இன்றும் தனது கல்வியை பெற பறந்து கொண்டிக்கிறாள்.

சவுதி கூட்டுப் படையால் ஏமனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் அழிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் ரோவாவின் பள்ளிக்கூடமும் ஒன்று.

இதுகுறித்து ரோவா கூறும்போது, "எங்கள் நாட்டில் நடக்கும் போரால் எனது கல்வி பறிக்கப்பட்டுள்ளது. நான் என்ன தவறிழைந்தேன் என்று தெரியவில்லை. எனது ஆசிரியர்கள் மற்றும் எனது நண்பர்களின் நினைவுகள் எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது. எனக்கு எனது அமைதியான வாழ்க்கை வேண்டும்" என்று கூறினார்.

ஏமனில் நடக்கும் உள் நாட்டு போர் காரணமாக சுமார் 3 லட்ச குழந்தைகள் தங்களது கல்வியை இழந்துள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

மேலும் ஏமன் அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், ஷாபியா மோண்டோ, "ஏமனின் இந்த தலைமுறைகளுக்கு மறுக்கப்படும் கல்வி மிக ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது. வான்வழித் தாக்குதல் காரணமாக ஏராளமான பள்ளிக்கூடங்கள் இடிந்த நிலையில் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கூடங்களில்தான் ஏமன் நாட்டின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்" என்றார்.

வான்வழித் தாக்குதலால் பாதிப்படைந்த பள்ளிக் கூடங்களில் அமர்ந்து கல்வி பயிலும் சிறுவர் சிறுமிகள்

2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரசாங்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்