மொத்த வான் மண்டலத்தில் 35 சதவீதப் பகுதியை உள்ளடக்கி 4.4 கோடி விண்மீன்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களின் வரைபடத்தை வானியலாளர்கள் தயாரித்துள்ளனர். நட்சத்திர மண்டலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது இது முதன் முறையாகும்.
அனைத்து விண் வான்இயற்பியல் துறையின் (காஸ்ட்ரோ-CAASTRO) இயக்குநரும் சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியருமான பிரையன் கேன்ஸ்லர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் கிரெக் மாட்சென் ஆகிய இருவரும், கடந்த 60 ஆண்டுகால வானியல் ஆய்வுகள், டிஜிட்டல் தரவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த வரைபடத்தைத் தயாரித்துள்ளனர்.
குறைந்தது இருமுறை தென்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலங்கள் இந்த வரைபடத்தில் இடம்பிடித்துள்ளன. இவ்வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட நட்சத்திரத்தின் ஒளிரும் அளவையும் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
மேலும், கடந்த 60 ஆண்டுகளாக நட்சத்திரங்களின் ஒளிரும் அளவு பற்றிய விவரம் இருப்பதால் எந்த நட்சத்திரம் தனது பிரகாசத்தை எந்த வேகத்தில் இழந்து வருகிறது என்பதையும் கணக்கிட முடியும். இதற்குமுன் இந்தக் கணக்கிடல்கள் சாத்தியமில்லாமல் இருந்தன. பழங்கால தரவுகளையும், தற்போதைய தரவுகளையும் ஒப்பிட இந்த வரைபடம் உதவிகரமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
உலகம்
29 mins ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago