எம்.எச்.370: கருப்புப் பெட்டி சிக்னலை கண்டது ஆஸி. கருவி

By செய்திப்பிரிவு

மாயமான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரிகளில் இருந்து வெளியேறும் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிக்னல்களை உறுதி செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம் நொருங்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்படும் இடத்தில் கருப்புப் பெட்டியிலிருந்து வெளியேறும் சிக்னல்களை ஆஸ்திரேலிய கடற்படையின் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன.

இது குறித்து ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. (JACC) தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் கூறுகையில், "தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவாகியுள்ளது. எனினும், விமானம் தொடர்பாக எந்த தகவலும் இதுவரை பெறப்படவில்லை.

தெற்கு இந்திய பெருங்கடலில் இங்கிலாந்தின் எச்.எம்.எஸ். (HMS) எக்கோ என்ற ஒலி சிக்னல்களை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட நீர் மூழ்கி கப்பல் மூலம், கருப்புப் பெட்டியின் சிகனல் பெறப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளது. அங்கிருந்து ஒலி தரவுகள் மூலம் கண்டறியப்பட்ட சிக்னல்கள் எம்.எச்.370 விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து பதிவானதா என்று உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பேட்டரியின் ஆயுள் காலம் இன்று அல்லது நாளை காலாவதி ஆகிவிடும் என்பதால், தற்போது கண்டறியப்பட்டுள்ள சிக்னலை கொண்டு தரவுகளை ஆராயும் பணி தீவிரமடைந்துள்ளது.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற போயீங் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது. அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்ககூடும் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியே கிடைத்த தகவலை கொண்டு பல்வேறு நாடுகள் தேடலில் ஈடுப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

4 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்