வரி ஏய்ப்பு: பாக். கேப்டன் மிஸ்பா உல் ஹக் வங்கிக் கணக்குகள் முடக்கம்

By பிடிஐ

ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்து மனம் வெதும்பிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தற்போது புதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

3.9 மில்லியன் ரூபாய்கள் வரை அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவரது வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் பெடரல் பீரோ ஆஃப் ரெவின்யு முடக்கியுள்ளது.

மற்றொரு பாகிஸ்தான் வீரர் அசார் அலியின் வங்கிக் கணக்குகளும் வரி ஏய்ப்புக்காக முடக்கப்பட்டுள்ளது.

எப்.பி.ஆர். கூறும் தொகை மீது பிரச்சினை உள்ளது எனவே இதற்கு எதிராக சட்ட ரீதியாகப் போராடுவேன் என்று மிஸ்பா கூறியுள்ளார்.

3.9 மில்லியன் ரூபாய்கள் மிஸ்பா வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறிய வருவாய்த் துறை, அசார் அலி 1.5 மில்லியன் ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட மிஸ்பா உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகியோர் பாகிஸ்தான் நிதியமைச்சரையே சந்தித்துப் பேசியதாகவும் மிஸ்பாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்