சிறந்த மனிதராக போப் தேர்வு வாடிகன் வரவேற்பு

By செய்திப்பிரிவு

2013-ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸை டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளதை வாடிகன் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லோம்பார்தி, சிறந்த மனிதராக போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வர வேற்கிறோம். இது அவருக்கு புகழ் சேர்க்கும் என்பதற்காக வரவேற்க வில்லை. ஏராளமான மக்களுக்கு நல்ல நம்பிக்கை அளிக்கும் நிகழ்வாக இருக்கும் என்பதால் இதனை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

கத்தோலிக்க தேவாலயத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதைத் தடுக்க குழு ஒன்றை அமைத்து போப் ஆண்டவர் கடந்த வாரம் உத்தரவிட்டார். தேவா யத்தை வழி நடத்துபவர்களின் தவறான செயல்களால் பல்வேறு நாடுகளிலும் முக்கியமாக அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபை மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இதனை மாற்ற பல்வேறு உறுதி யான நடவடிக்கைகளை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார். அவர் பதவியேற்ற சுமார் 9 மாதங்க ளில் உலகின் மனசாட்சியாக மாறி யுள்ளார் என்பதைப் பாராட்டி டைம் பத்திரிகை அவரை ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்துள்ளது. உலகை ஒருங்கிணைக்க எழுந்துள்ள புதிய குரல் என்று டைம் பத்திரிகை போப் ஆண்டவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர்கள் பட்டியலில். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை கசியவிட்ட எட்வர்ட் ஸ்னோடென் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைக்காகப் போராடும் எடித் வின்ட்சோர் 3-வது இடம் பெற்றுள்ளார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் ஃபிசோஸ், டெக்சாஸ் மாகாண செனட் உறுப்பினர் டெட் குருஸ், பாப் பாடகி மைலே ரே சைரஸ், ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, துறை அமைச்சர் கேத்லீன் செபிலியஸ் ஆகியோர் முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்றனர்.

நரேந்திர மோடி உள்பட 42 பேர் சிறந்த மனிதர்கள் பட்டியலுக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்