தெற்கு சீன கடலில் சீனாவின் தீவுகளுக்கு வெகு அருகே சென்ற அமெரிக்க ‘டெஸ்ட்ராயர்’ கப்பல்கள்

By ராய்ட்டர்ஸ்

சர்ச்சைக்குரிய விதத்தில் தெற்கு சீன கடல் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள தீவுகளுக்கு அருகில் அமெரிக்காவின் ‘டெஸ்ட்ராயர்’ போர்க்கப்பல்கள் ரோந்து மேற்கொண்டது பரபரப்பாகியுள்ளது.

ஸ்பார்ட்லிஸ் தீவுக்கூட்டம் மற்றும் பிலிப்பைன்ஸ் அருகேயுள்ள ஸ்கார்பரோ ஷோவால் பகுதியில் அமெரிக்காவின் டெஸ்ட்ராயர் கப்பல்கள் என்று அழைக்கப்படும் ஸ்டீதம், ஸ்ப்ரூவன்ஸ் மற்றும் மாம்சென் ஆகியவை ரோந்து மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் 12 நாட்டிக்கல் மைல்கள் தூரத்துக்குள் செல்ல உயர்மட்ட அனுமதி மற்றும் பிற சட்டச்சிக்கல்கள் இருப்பதால் சீனா உருவாக்கி வைத்துள்ள தீவுகளுக்கு 14 நாட்டிக்கல் மைல்கள் தூரத்தில் டெஸ்ட்ராயர் கப்பல்கள் ரோந்து மேற்கொண்டன.

இது குறித்து அமெரிக்க கடற்படை அதிகாரி கிளிண்ட் ராம்ஸ்டென் நடைமுறை, உத்தி சார் விவரங்களை அளிக்க முடியாது என்று கூறினாலும், இது வழக்கமான ரோந்துப் பணியே என்று கூறினார். “இந்த ரோந்துப் பணிகள் அனைத்தும் பன்னாட்டுச் சட்டத் திட்டங்களுக்குட்பட்டதே” என்றார்.

சீன கடற்படைக் கப்பல்கள், சில சமயங்களில் சீன மீன்பிடிக் கப்பல்களும் கூட அமெரிக்கக் கப்பல்களை கண்காணிப்பதாக அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்த சட்டபூர்வமானதா என்று கேட்டு பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தீர்ப்பு பிலிப்பைன்ஸுக்கு சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்