எபோலாவை கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு நிதி பற்றாக்குறை: தேவை ரூ.6,100 கோடி, கிடைத்தது ரூ.61 லட்சம்

By பிடிஐ

எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.6,100 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை வெறும் ரூ.61 லட்சம் மட்டுமே நிதியுதவி பெறப்பட்டுள்ள தாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:

எபோலா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.6,100 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டு வதற்காக ஒரு நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரொக்கமாக ரூ.61 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதையும் ஒரே ஒரு நாடுதான் (கொலம்பியா) வழங்கி உள்ளது. இதுதவிர, சுமார் ரூ.122 கோடியை இந்த நிதியத்துக்கு வழங்குவதாக பல்வேறு நாடுகள் உறுதி அளித்துள்ளன.

மனித உயிரை பலி வாங்கும் எபோலா வைரஸால் கினி, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ள இதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

குறிப்பாக இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிதியத்துக்கு உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும். நிதியுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ள நாடுகளும் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

“ஒவ்வொரு நாளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐ.நா. இலக்குப்படி ரூ.6,100 கோடியை திரட்டினால்தான் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்காவது டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் சிகிச்சை அளிக்க முடியும்” என ஐ.நா. எபோலா அவசரகால நடவடிக்கை (யுஎன்எம்இஇஆர்) அமைப்பின் தலைவர் அந்தோனி பன்பரி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பான் கீ மூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, இதுவரை எபோலா வைரஸால் 7 நாடுகளைச் சேர்ந்த 8,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,493 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான சுகாதாரப் பணியில் ஈடுபட்ட 236 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்