கடந்த டிசம்பர் 8-ம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடு பட்டதை மன்னிக்கவே முடியாது.
நாட்டின் சட்டத்துக்கு கட்டுப் பட்டு நடந்து கொள்ளும் தொழி லாளர்களை கவுரவமாகவும் நியா யமாகவும் நடத்துவோம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷீன் லூங் கூறினார்.
சிங்கப்பூர் பிரதமர் தனது புத் தாண்டு செய்தியில் கூறியதாவது: “வெளிநாட்டுத் தொழிலாளர்களை கவுரவமாகவும் நியாயமாகவும் நடத்துவோம். அதே சமயம், நமது நாட்டின் சட்டதிட்டங்களையும், சமூக நெறிமுறைகளையும் அவர் கள் மதித்து நடக்க வேண்டும்.
லிட்டில் இந்தியாவில் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் கலவரம் செய்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் நாட்டை விட்டு வெளியேற் றப்பட்டுள்ளனர்.
இந்த கலவரம் ஏற்பட்டதற் கான காரணம் குறித்து ஆராயவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் யோசனைகளைத் தெரிவிக்கவும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பைத் தேடி சிங் கப்பூருக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் களுக்கு அனுமதி வழங்குவதை இப்போது குறைத்தி ருக்கிறோம். அதே சமயம் முற்றி லுமாக தடை செய்யவில்லை. தொழிலாளர்களை அனுமதிப் பதில் சமநிலையான அணுகு முறையை பின்பற்றுகிறோம். அதனால்தான் சிறு, நடுத்தர நிறுவனங்கள் போதிய தொழி லாளர்கள் கிடைக்காமல் சிரமப்ப டுகின்றன.
நவீன தொழில்நுட்ப வசதிக ளைப் பயன்படுத்துவதன் மூலம், அந்நிறுவனங்களுக்கு உதவி வருகிறோம். இதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனினும், கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்துவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத் துவதிலும் வெளிநாட்டுத் தொழி லாளர்களின் தேவை இருப்பதை மறுப்பதற்கில்லை” என்றார்.
லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பஸ் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 57 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago