6-வது அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா? - அமெரிக்கா தகவல்

By ஏஎஃப்பி

நிலத்துக் கடியில் தனது 6-வது அணுகுண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வடகொரியா, நிலத்துக் கடியில் தனது 6-வது புதிய அணுகுண்டு சோதனையை நடத்தத் தயாராக இருப்பதற்கான அடையாளங்களைக் காட்டுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தென்கொரிய அரசு வெளியிட்ட அறிக்கையில், ''வடகொரியா விரைவில் தனது புதிய அணுகுண்டு சோதனையை நடத்த தனது அதிபரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரியா அந்நாட்டின் கிழக்குப் பகுதியின் கல்மா எனும் இடத்தில் புதன்கிழமை நடத்திய ஏவுகணை சோதனை சில நிமிடங்களிலேயே தோல்வியில் முடிந்தது என்பதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

வடகொரியா கடந்த ஆண்டு இறுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது.

இதற்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. வடகொரியா மீது ஐ.நா.சபை சார்பில் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வடகொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்