வெனிசூலாவில் போராட்டம்: 2 பேர் பலி; 23 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நிகழ்ந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசூலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் நிகோலஸ் மதுரோவின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து காரகாஸில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் அருகே அரசு எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களுக்கு எதிராக அரசின் ஆதரவாளர்களும் பேரணி நடத்தி கோஷமிட்டனர்.

அப்போது அடையாளம் தெரியாத சிலர், கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அரசின் ஆதரவாளர் ஒருவரும், மாணவர் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக காரகாஸில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெரிடாவில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப் பட்டுள்ள மாணவர்களை உடனடி யாக விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்