பாகிஸ்தான், ஈரான் எல்லையில் இருநாட்டுப் படையினரும் பீரங்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதி ஈரான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக இருநாட்டு எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
பாகிஸ்தானில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் ஆரம்பம் முதலே இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கடந்த வாரம் ஈரான் எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஈரானின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஈரான் நாட்டின் 4 வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீட்டால் 4 ஈரானிய வீரர்களையும் தீவிரவாதிகள் விடுவித்தனர். தற்போது மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் காஷ்மீர் எல்லை
எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடிகொடுக்கப்பட்டது. இப்போது ஈரான் ராணுவமும் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் அந்த நாட்டு ராணுவத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago