உணவுப் பொருள் விற்பனைத் துறையில் ஜாம்பவானான அமெரிக்க நிறுவனம் மெக்டோனல்ஸ் கம்யூனிஸ நாடான வியட்நாமில் முதல் கிளையைத் திறந்துள்ளது. வியட்நாம்-அமெரிக்கப் போர் முடிந்து 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் அமெரிக்கப் பெரு நிறுவனம் வியட்நாமில் கிளை தொடங்கியுள்ளது.
ஹோசி மின் நகரின் தென்பகுதி யில் தன் கிளையை மெக்டோனல்ஸ் சனிக்கிழமை தொடங்கியது. அதி கரித்து வரும் நடுத்தர வர்க்க மக்கள்தொகையைக் குறிவைத்து தன் சந்தையை விரிவுபடுத்த மெக் டொனால்ட் திட்டமிட்டுள்ளது.
பர்கர் கிங், கே.எப்.சி, காபி விற்பனையில் ஜாம்பவானான ஸ்டார் பங்க் ஆகிய நிறுவனங் களுடன் மெக்டோனல்ஸ் போட்டி யிட வேண்டியிருக்கும். ஆனால், “9 கோடி மக்கள் தொகை, சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 93 ஆயிரம் ஆகியவை காரணமாக சந்தை வாய்ப்பு அதிகமாக உள்ளது” என வியட்நாம் கிளைகள் கலந்தாய்வு மைய மேலாண் இயக்குநர் சீயன் கோ தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் அரிசியும், நூடுல்ஸும் பிரதான உணவு களாகும். அந்த உணவுப் பழக்கத்தி லிருந்து துரித வகை உணவுக்கு மக்களை மாற்றும் முயற்சியில் அமெரிக்க உணவு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago