நியூயார்க் நகர மேயர் தேர்தல்
 பில் டி பிளாசியோ வெற்றி

By செய்திப்பிரிவு

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பில் டி பிளாசியோ வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை நியூயார்க் மேயராக இருந்த பிரபல தொழிலதிபர் மைக்கேல் ரூபன்ஸ் புளூம்பெர்க்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. புளூம்பெர்க் அமெரிக்காவின் 7-வது பெரிய பணக்காரர் ஆவர். சர்வதேச அளவில் உள்ள பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் புளூம்பெர்க் உள்ளார்.


 சுமார் 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் நியூயார்க் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அமெரிக்கா அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நியூஜெர்சி மாகாண ஆளுநர் பதவியை குடியரசுக் கட்சியின் கிறிஸ் கிறிஸ்டி தக்கவைத்துக் கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விர்ஜீனியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் டெர்ரீ மெக்அயூலிப் நூலிழையில் வெற்றி பெற்றார். அவருக்கு 47 சதவீத வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் கென் க்யூசினிலீக்கு 46 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற மிக முக்கியமான தேர்தல் இவை என்பதால் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்