ஜப்பானில் தேர்தல் நிதி மோசடி பெண் அமைச்சர்கள் ராஜினாமா

By பிடிஐ

ஜப்பானில் தேர்தல் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டால் இரண்டு பெண் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் ஷின்சோ அபே அமைச்சரவையில் ஐந்து பெண் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் வர்த்தகத் துறை அமைச்சர் யுகோ ஒபுச்சி, நீதித்துறை அமைச்சர் மிடோரி மிட்ஸுஷிமா ஆகியோர் தேர்தல் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்காளர்களுக்கு பணம் அளித்தது, பெண் வாக்காளர்க ளுக்கு மேக்அப் சாதனங்களை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டு கள் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. இதனால் அந்த நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து இரு அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர்கள் கூறியபோது, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, எனினும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்பதற்காக பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்