ஹஜ் புனித யாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரபூர்வமாக நிறைவடைகிறது. இந்த புனித யாத்திரையில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் முஸ்லிம்கள், சவுதி அரேபியாவுக்கு வந்துள்ளனர்.
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் பங்கேற்ற பலர், நேற்று மெக்காவுக்கு திரும்பிச் சென்றனர். அங்குள்ள காபாவை சுற்றி வந்த பிறகு முறைப்படி தங்களின் ஹஜ் பயணத்தை நிறைவு செய்தனர். பலர் நேற்றே தங்களின் ஊருக்குத் திரும்பிச் செல்ல தொடங்கிவிட்டனர். எனினும், அதிகாரபூர்வமாக ஹஜ் யாத்திரை இன்றுதான் நிறைவடைகிறது.
சவுதி மன்னர் பேச்சு
இதற்கிடையே ஹஜ் யாத்திரை வந்துள்ள முக்கிய பிரமுகர்களை சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதற்கும் இஸ்லாம் மதத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு சவுதி அரேபியா உள்பட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago