ரஷியாவில் 2-வது நாளாக தற்கொலைப்படை தாக்குதல்: 14 பேர் பலி, 28 பேர் காயம்

ரஷியாவின் வால்காகிராட் நகரில் திங்கள்கிழமை டிராலிபேருந்து ஒன்றில் நிகழ்த்தப்பட்ட ஆண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகினர். தொடர்ந்து 2-வது நாளாக தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் 80 பேர் பயணம் செய்யக்கூடிய அந்தப் பேருந்து வெடித்துச் சிதறியதாகவும் சடலங்கள் தூக்கி வீசப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, ரஷிய சுகாதாரத் துறை செய்தித் தொடர் பாளர் ஓலெக் சலகை அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "டிராலிபேருந்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர்" என்றார்.

தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒரு ஆண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், அந்த நபரின் உடல் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவும் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலிலும் இதே நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள்கள் ஒரே வகையைச் சேர்ந்ததாக உள்ளதால், இவ்விரு தாக்குதலும் கூட்டாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இதே நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலியானதுடன் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

புதின் உத்தரவு

தொடர் தீவிரவாத தாக்குத லையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் விளாதிமிர் புதின் உத்தர விட்டுள்ளார். குறிப்பாக வோ ல்கோகிராட் நகரில் சிறப்புப் படை அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தேசிய தீவிரவாத தடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஜனவரி 7-ம் தேதி முதல் சொச்சி நகருக்குள் செல் லும் வாகனங்களை தணிக்கை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE