தாய்லாந்தில் பொதுத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும், பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் எதிர்க்கட்சித் தொண்டர்கள் வியாழக்கிழமை பிரமாண்ட பேரணி நடத்தினர்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு பிப்ரவரி 2-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இடைக் கால அரசுக்கு பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும். அரசியல் அமைப்பு சாராத மக்கள் மன்றத்தின் மூலம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதேப் தவுக்சுபன் தலைமையில் நாள்தோறும் பேரணி, போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவற்றின் நுழைவுவாயில்களுக்கு பூட்டுப் போட்டனர். பலவேறு அரசு அலுவல கங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் கூடாரங்களை அமைத்து அங்கேயே நிரந்தரமாக தங்கியுள் ளனர். இதனால் தலைநகர் பாங்காக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
திட்டமிட்டபடி பொதுத் தேர்தல்
இதனிடையே பொதுத் தேர்தல் தொடர்பாக வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் பிரமதர் யிங்லக் ஷினவத்ராவின் பிய் தாய் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. ஜனநாயகக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 2-ம் தேதி திட்டமிட்டபடி பொதுத்தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago