அமெரிக்க தேவாலயத்தில் 9 கறுப்பு இனத்தவரை கொன்ற இளைஞருக்கு மரண தண்டனை

By ஏபி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம், சார்ல்ஸ்டன் நகரில் இனவெறி காரணமாக 9 கறுப்பு இனத்தவரை கொலை செய்த இளைஞருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சார்ல்ஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க மக்களின் மிகப் பழமையான இமானுவேல் ஏஎம்இ தேவாலாயம் உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கியுடன் நுழைந்த டைலன் ரூஃப் (21) என்ற வெள்ளை இன இளைஞன், அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். இதில் பாதிரியார் உட்பட 3 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கறுப்பின வெறுப்புணர்வே இந்தப் படுகொலைக்கு காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வெறுப்புணர்வு குற்றம் உட்பட 33 குற்றச்சாட்டுகள் டைலன் மீது சுமத்தப்பட்டன. விசாரணையை தொடர்ந்து இவ்வழக்கில் டைலன் குற்றவாளி என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுமார் 3 மணி நேர விவாதங்களுக்கு பிறகு டைலனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.

தண்டனை அறிவிக்கப்படும்போது, டைலன் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. டைலன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. மேலும் தண்டனை குறைப்பும் கோரவில்லை.

தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு நீதிபதிகளிடம் தண்டனை குறைப்பு கோருவதற்கான இறுதி வாய்ப்பு டைலனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் டைலன் இதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. “நான் செய்தது சரியென்றே இப்போதும் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு கேட்க எனக்கு உரிமை உள்ளது. ஆனால் இதனால் எனக்கு நன்மை கிடைக்குமா என்று தெரியவில்லை” என்றார்.

அமெரிக்காவில் வெறுப்புணர்வு குற்றங்களுக்கான பெடரல் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இந்த இளைஞன் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்