நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் இறந்தன.
இந்நிலையில் உள்துறை அமைச்சக துணை செய்தித் தொடர்பாளர் ஜனகநாத் தகால் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “நேபாளத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 28 பேரை காணவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீட்புக் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் இருந்து ஹெலிகாப்டர் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் மக்கள் மீட்கப் பட்டு வருகின்றனர்” என்றார்.
நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின்போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஏராளமானோர் உயிரிழக் கின்றனர்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். இதில் வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் இன்னும் குடிசைகள் மற்றும் கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago