டார்க் சாக்லெட்டுகள் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றும் நுண்ணூட்டக் கழகம் மற்றும் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அதில், டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரியவந்தது.
டார்க் சாக்லெட்டுகளைச் சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும், ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.
தமனிகளின் விரைப்புத்தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும்தன்மையும் தமனி வீக்கத்துக்குக் காரணமாக அமை கின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
ஆய்வில் ஈடுபட்ட டைடெரிக் எஸ்ஸெர் கூறியதாவது: “டார்க் சாக்லெட்டுகளில் உள்ள பிளாவனல்கள் உணவு அருந்தும் தூண்டலை நிறுத்துகின்றன. இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கியமானவைதான்” என்றார். நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற்கண்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago