இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றமில்லை: வெளியுறவுத் துறை அறிவிப்பு

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்ச அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் பேசிய ராஜபக்ச, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு, கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை உருவாக வேண்டும். உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில் மக்களிடம் அமைதியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்தார்.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் சர்வதேச விசார ணையை ஏற்க முடியாது என்று அதிபர் ராஜபக்ச கூறி வருகிறார். இந்த விவகாரத்தால் இரு நாடு களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE