வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்துவதில் சீனா பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
ஜப்பானுக்கு அரசு பணியின் நிமித்தமாக பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, "வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கும். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா ஜப்பான், தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது" என்றார்.
மேலும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த பயணத்தில் ஜப்பான் - ஆஸ்திரேலியா இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக வட கொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம் என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
57 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago