துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று உணவு விடுதியில் தாக்குதல் நடத்தி 39 பேர் பலியான சம்பவத்தில் குற்றவாளியின் அடையாளம் தெரிந்ததாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் அனடோலு, செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரீனா இரவு விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் கண்டறியப்பட்டது. அவரைப் பற்றிய கூடுதலான தகவலை தற்போது அளிக்க முடியாது. விரைவில் அவர் பிடிக்கப்படுவார்" என்று கூறினார்.
இந்த நிலையில் உணவு விடுதியில் தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றவாளி கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிரவாத தாக்குதலால் எங்களை பிரிக்க முடியாது
இந்த தாக்குதல் தொடர்பாக துருக்கியின் அதிபர் எர்டோகன் கூறும்போது, "துருக்கியில் யாருடைய வாழ்க்கையும் பயத்தில் இல்லை. இது போன்ற தீவிரவாத தாக்குதலால் எங்களது ஒற்றுமையை பிரிக்க முடியாது. அனைவரையும் பாதுகாப்பது என்னுடைய கடமை" என்று கூறினார்.
முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருந்தது. இதனிடையே திங்கட்கிழமை இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என்று ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago