அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறித்து டிரம்பை சுட முயன்றார். அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், அவர் பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் ஸ்டீபன் ஸ்டாண்ட்போர்டு என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அவர் கடந்த 18 மாதங்களாக நியூஜெர்ஸி நகரில் காரில் வசித்து வந்துள்ளார்.
டிரம்பை குறி பார்த்து சுடுவதற்காக தனியார் துப்பாக்கி சுடும் மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அவரை சுட்டுக் கொல்வதற்காகவே பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வந்ததாக மைக்கேல் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீஸார் விழிப்புடன் செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், முஸ்லிம்கள் நுழைய தடைவிதிப்பேன், இனரீதியாக மக்களை வகைப்படுத்துவேன் என்று டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவரது பிரச்சார கூட்டங்களில் அவ்வப்போது வன்முறை ஏற்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
8 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago