தமிழக மீனவர்கள் மற்றும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சினைக்கு இந்த ஆண்டு முடிவில் தீர்வு கிடைக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல்பகுதியில் தங்கள் விருப்பத்திற்கேற்ப மீன் பிடிக்க அனுமதிக்க முடியாது; அதே வேளையில் இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் மோதல் போக்கையும் கடைபிடிக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.
அமைதித் தீர்வு தேவை:
அமைதியான தீர்வு காண அவசியம் இருப்பதை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்கே, ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த அனுரா திசநாயக கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடிப்பது பற்றிய பிரச்சினை குறித்து இந்திய அரசிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான தீர்வில் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு உத்தரவாதம் வேண்டும், அவர்கள் எதிர்த்தால் நிச்சயம் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை, என்றார்.
இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 130-140 படகுகள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரணில், படகுகளை திருப்பி அளிக்க வாய்ப்பில்லை, ஆனால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யப்படுவது தொடர்பாக உறுதி அளிக்கப்படும் என்றார்.
மேலும் இலங்கைக் கடற்படையினர் தகவலை மேற்கோள் காட்டிய ரணில், இலங்கை கடல்பகுதியில் ஆண்டொன்றுக்கு சுமார் 1,000 இந்தியப் படகுகள் புழங்குகின்றன என்றார், இதனைத் தடுக்க, அபராதத்தைக் கூட்ட விரைவில் சட்டமியற்றப்படும் என்றார் ரணில்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago