மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் படம் வெளியீடு

By கார்டியன்

லண்டன் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பை நடத்திய சந்தேக நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்தி 22 பேர் பலியானதற்கு காரணமானவர் என்று இங்கிலாந்தில் பிறந்த சல்மான் அபேட (22) என்ற இளைஞரின் புகைப்படத்தை லண்டன் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனில் 2005-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் என்பதால், லண்டனின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்க தெரசா மே உத்தரவிட்டுள்ளார். தெரசா மே-வின் உத்தரவுப்படி லண்டனின் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து லண்டன் பிரதமர் தெரசா மே கூறும்போது, "லண்டன் மான்செஸ்டர் நகரின் இசை நிகழ்ச்சி குண்டுவெடிப்பை தனி நபர் நிகழ்த்தியுள்ளார். அத்தனிநபருக்கு பின்னால் ஒரு குழு இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே லண்டன் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 ராணுவ வீரர்கள் லண்டன் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொது மக்களுக்கான எச்சரிக்கை அல்ல. இது விவேகமான நடவடிக்கை" என்றார்.

ஐஎஸ் பொறுப்பேற்பு

மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என்று அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற நகரான மேன்செஸ்டர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்