சீனாவில் 58,789 பேர் நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக அந்த நாட்டில் முதுமை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 128 வயதுடைய நபர் ஒருவரும் வாழ்ந்து வருகிறார். சீனாவில் முதுமை குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுவரும் (The Gerontological Society of China) என்ற அமைப்பு இது தொடர்பான ஆய்வின் முடிவில் தெரிவித்ததாவது, "சீனாவில் சுமார் 60,000 பேர் நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளில் வாழ்பவர்கள் ஆவர்.
கணக்கிடப்பட்டுள்ள 58,789 பேரில் பெரும்பான்மையானோர் பெண்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் உள்ள ஹைனான், குவாங்ஸி, அனியூய் ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள 10 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 4000-த்துக்கும் அதிகமானோர் 90 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதனால் இந்த மாகாணமே (land of longevity) என்று அழைக்கப்படுகிறது.
மேலும், 100 வயதை கடந்த முதியவர்கள் அனைவரும் தற்போதைய நிலையிலும் வீட்டு வேலைகள் அல்லாது வெளிப்புற வேலைகளையும் கவனித்து, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கையாளுகின்றனர் என்பதை கவனிக்கக்கூடிய அம்சமாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago