துருக்கி புத்தாண்டு தாக்குதல்: சிசிடிவி காட்சி வெளியீடு

By கார்டியன்

துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் சிசிடிவி காட்சியை அந்நாட்டு போலீஸார் வெளியிட்டனர்.

புத்தாண்டு இரவில் துருக்கியில் நடந்த இந்தத் கொடூரத்தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இருவர் உட்பட 39 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தப் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் சிரியா மற்றும் இராக்கில் பரவியுள்ள ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதில் துருக்கி ஆர்வம் காட்டி வந்தது. அதனையடுத்து ஐஎஸ் இயக்கம் துருக்கிக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் இயக்கமே செய்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என துருக்கி அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தாக்குதலின்போது பதிவான சிசிடிவி காட்சியை துருக்கி போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி கேளிக்கை விடுதிக்குள் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உலக நாடுகள் கண்டனம்

துருக்கியில் நடத்தபட்ட இந்தத் கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

நடந்தது என்ன?

முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்