வடகொரியாவை கண்காணிக்க அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ-வில் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த தயாராகி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதல் காரணமாக அந்த நாடு அணுஆயுத சோதனையை நடத்தவில்லை.
எனினும் அவ்வப்போது அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் வடகொரியா நடத்திய 2 ஏவுகணை சோதனைகள் தோல்வி அடைந்தன.
இந்தப் பின்னணியில் வடகொரியாவை உன்னிப்பாகக் கண்காணிக்க அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ-வில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐஏ இயக்குநர் மைக் பாம்பே கூறியபோது, வடகொரியாவால் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நாட்டை மிக தீவிரமாக கண்காணிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையில் அந்த படை செயல்படும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
27 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago