வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 20 பேர் பலியான சம்பவத்துக்கு திட்டம் வகுத்து மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு துணை காவல் ஆணையர் யூசப் அலி கூறும்போது, "டாக்காவில் கடந்த ஜூலை மாதம் விடுதியில் தாக்குதல் நடத்தி 20 பேர் பலியான சம்பவத்துக்கு திட்டம் தீட்டிய முக்கிய தீவிரவாதியான நுருல் இஸ்லாம் மார்சான்னும், மற்றுமொரு தீவிரவாதியும் டாக்காவின் ரேயர் பஜாரில் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்" என்று கூறினார்.
மர்சான் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டாரா அல்லது அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்துவதை அறிந்து தற்கொலை செய்துகொண்டாரா என்பதை போளீஸார் தெரிவிக்கவில்லை.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago