அமெரிக்காவின் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட அவசரகால எல்லை நிதியாக 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தெற்கு எல்லையில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைத் தணிக்க 4.6 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் இந்த நடவடிக்கையை நிறைவேற்றிய ஒரு நாள் கழித்து, பிரதிநிதிகள் சபை 305 முதல் 102 வரை இரு கட்சி வாக்குகளைப் பெற்றது, இதன்பிறகு எல்லைத் தடுப்புச் சுவர் மசோதாவை அதிபருக்கு அனுப்பப்படுகிறது.
அமெரிக்க மன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் ஜனநாயகவாதிகள் புலம்பெயர்ந்த குழந்தைகளின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும் கூடுதல் உத்தரவாதத்தை விரும்பினர். ஆனால் இந்த சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் கொண்டுவருவதில் தோல்வியடைந்துவிட்டதாக குடியரசுக் கட்சியினரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
"நாள் முடிவில், குழந்தைகளைப் பாதுகாக்க தேவையான ஆதாரங்கள் கிடைக்குமா என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்," என்று பெலோசி வாக்களிப்பதற்கு முன்பு ஜனநாயகக் கட்சியினரிடம் கூறினார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அது தொடர்பான ஒப்பந்தங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். ஆனால் அவர் கோரி வந்த நிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வில்லை. இதனால் நெருக்கடி ஏற்பட்டது.
நாடாளுமன்ற முடக்கம்
இதனால் அமெரிக்க நாடாளுமன்றம் முடங்கியது. எந்த நேரமும் அமெரிக்காவில் அவசர நிலை அறிவிக்கப்படும் நிலை இருந்தது. 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தினால் நாட்டின் அத்தனை அரசுப்பணிகளும் முடங்கின.
இதன் பிறகு, பணியாளர்களுக்கு மூன்று வார கால சம்பளம் வழங்கும் ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். அதன்படி அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீண்டநாள் நடந்த அரசு முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. எனினும் அவசரநிலை அறிவிக்கப்போவதாக கூறிவந்தார் ட்ரம்ப்.
இந்நிலையில் நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று அமெரிக்காவின் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவசரகால எல்லை நிதியாக 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago