சீனப் பொருட்களுக்கு தொடர்ந்து வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும், சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகளை விதித்துள்ளார்.
இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் கடும் மோதல் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்துள்ளது.
இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் புகார் எழுப்பி வருகிறார்.
அண்மையில் இரு நாடுகளும் மற்ற நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய ‘வர்த்தகப் போர்’ நடைபெறும் சூழல் உருவானது. பின்னர் இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடிவு செய்தன. எனினும், சீனப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.
மேலும், அமெரிக்காவின் தயாரிப்பு ரகசியங்களை காப்புரிமை விதிகளை மீறி சீனா திருடுவதாகவும், வரத்தக நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை உயர்த்தியது.
இந்த நிலையில் இரு நாடுகள் இடையேயான ‘வரிப்போர்’ மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
சீனாவின், இணையத் தொழில்நுட்பத் தயாரிப்புகள், கடல் உணவுப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், மரச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையில் சீனாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago