அலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா 54 வயதில் ஓய்வு பெறுகிறார்

By ஏஎஃப்பி

மிகப்பெரிய இணையதள விற்பனை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா தன்னுடைய 54-வது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வருங்காலத்தில் படிப்பை நோக்கமாகக் கொண்ட சமூக சேவைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1964-ம் ஆண்டு பிறந்த ஜாக் மா, புகழ்பெற்ற சீனத் தொழிலதிபர். அலிபாபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். சிறுவயதிலேயே ஆங்கிலம் கற்பதில் அதீத ஆர்வமுடையவராக இருந்தார். இதற்காக ஆங்கிலம் பேசுபவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டார். இதனாலேயே 1999-ல் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கும் முன் ஜாக் மா ஆங்கில ஆசிரியராக இருந்தார்.

ஓய்வு குறித்துப் பேசிய ஜாக் மா, ''பில் கேட்ஸிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். ஒரு நாள், விரைவில் ஆசிரியர் பணிக்கே திரும்பிவிடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி, அலிபாலா குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.30.34 லட்சம் கோடி ஆகும். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, ஜாக் மா ரூ.2.78 லட்சம் கோடி சொத்துடன் சீனாவின் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.

புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றவர், ஆசியா மற்றும் உலக அளவில் செல்வந்தர் என பல பெருமைகள் இவருக்குண்டு.

ஜாக் மா, சீன தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடியாகவும், இன்றைய உலகின் மிகச்சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்