மாலி கிராமம் ஒன்றில் நடந்த பயங்கரம்: தீவிரவாதிகள் தாக்குதலில் 100 பேர் பலி; உடல்கள் எரிப்பு

By ஏஎஃப்பி

மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த டோகான் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 95 பேர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையும் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையும் தற்காலிகமானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காவூண்டூ மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏஎப்பியிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், சோபானே காவூ கிராமத்தில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 95 பேர் இத்தாக்குதலுக்கு இரையாகினர். உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன. இன்னும் பல உடல்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.'' என்றார்.

படுகொலை நடந்த கிராமம் குறித்து மாலி நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், ''இத்தாக்குதலில் டோகான் கிராமம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.'' என்றார்.

தீவிரவாதிகளின் கிராமத்திற்குள் வந்ததுகுறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இக்கிராமத்தில் 300 பேர் வசிக்கின்றனர். அனைவரையும் வரழைத்து சுட்டுக்கொன்றுள்ளனர். உயிரிழந்த உடல்களைக் குவித்து தீவைத்து எரித்துள்ளனர். இதன் விவரம் இன்னும் முழுமையாக அறியப்பட முடியவில்லை.

சமீபத்தில் மோஸியாக் இனத்தினரிடைய நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக இத்தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மோஸியாக் இனத்தினரிடைய வன்முறைச் சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் அதிகமாக உள்ள அமடாவூ காவூஃபா தலைமையிலான புஃலானி ஜிகாதிகள், மற்ற பிரிவினர்களான பம்பாரா மற்றும் டோகா இனக்குழுக்களை இலக்காக வைத்து பதிலுக்குப் பதில் பழிவாங்கும் தாக்குதல் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாகவே இம் மாபெரும் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பியூல் எனவும் அழைக்கப்படும் ஃபுலானி ஜிகாதிகள் இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பிலும் வர்த்தகம் மற்றும் தொழில்களிலும் முதல் இடத்தில் உள்ளவர்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில்தான் பம்பாரா மற்றும் டோன்ட் பாரம்பரிய விவசாயிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்