பசிபிக் தீவுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

By ஏஎஃப்பி

பசிபிக் பெருங்கடல் தீவான டோங்கா மற்றும் நியூசிலாந்தின் வடகிழக்கில் தொலைதூரம்  உள்ள கெர்மடெக் தீவுகள் அருகே அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுகப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

இன்று அதிகாலை 4.25 மணியளவில் நியூசிலாந்துவுக்கு வடக்கு தீவான நகரமான தவுரங்காவின் வடகிழக்கே 928 கிலோமீட்டர் தூரத்தில்  10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உருவானது.

கெர்மடெக் தீவுகள் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவு என்ற முதன்மை தகவலில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மூலம் 7.2 ரிக்டர் அளவாக ஆக குறைத்து அறிவித்தது.

அதற்கும் முன்னதாக இன்று அதிகாலை 2.26 மணியளவில் பசிபிக் தீவான ஒஹோநுவா தீவின் வடகிழக்கில் 97 கிலோ மீட்டர் தொலைவில் டோங்கா பசிபிக் தீவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக இருந்தது என அமெரிக்காவின் குளோபல் குவாக் மானிட்டர் அளவிட்டுள்ளது.

கெர்மடெக் தீவுகள் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்ததால் ஆரம்பத்தில் கடற்கரை, துறைமுகம், முகத்துவாரம் மற்றும் சிறிய படகு போக்குவரத்துக்களுக்கு மட்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பின்னர் நியூசிலாந்தின் சிவில் பாதுகாப்பு அமைப்பு எட்டு நிமிடங்களுக்குப் பிறகு கடல்சீற்றம் தணிந்ததைப் பற்றி விளக்கியது.

சுனாமி எச்சரிக்கை வாபஸ்

பின்னர், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தென் பசிபிக் கடல் பகுதிகளுக்கு விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையையும் வாபஸ் பெற்றது.

ஆனால் "நிலநடுக்கத்திற்கு அருகிலுள்ள சில கடலோரப் பகுதிகளில் சிறிய அளவிலான கடல் மட்ட ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும்" என்று அறிவித்தது.

மக்கள் வசிக்காத கெர்மடெக் தீவு

கெர்மடெக் தீவில் ரவூல் தீவைச் சேர்ந்த நியூசிலாந்தின் சில பாதுகாப்புத் தொழிலாளர் தவிர கெர்மடெக்குகள் யாரும் அங்கு வசிக்கவில்லை. இத்தீவில் ரவூல் தீவைச் சேர்ந்த உள்ள பாதுகாப்புப் பணியாளர் 7 பேரும் பத்திரமாக உள்ளதாக நியூசிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இங்கு ஒப்பந்ததாரர்களோ பார்வையாளர்களோ யாரும் இல்லை என்றும் இத்துறை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இத்தீவில் எரிமலைச் சிகரங்கள் உளளன. அவற்றில் சில தற்போது கனன்று கொண்டிருக்கின்றன. அது கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயர்ந்துள்ளதால் அடிக்கடி 7.0 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்படும் நிலநடுக்கம் அம்மலையை உலுக்கியது.

சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் 2006 இல் மிகப்பெரிய நிலநடுக்கத்தை அனுபவித்தனர், 2007லும் ஒருமுறையும் 2011ல் இருமுறையும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை அனுபவித்தனர்.

கெர்மடெக் தீவுகள் ஒரு துணை வெப்பமண்டல தீவு  ஆகும். பசிபிக்கின் நெருப்புவளையத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறார்கள்.

இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்