ஈரான் மீது அமெரிக்காவின் ஒரு தோட்டா பாய்ந்தாலும் அது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எதைக் குறிவைத்துள்ளதோ அந்த நலன்கள் பற்றி எரிந்து விடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபுல்ஃபாஸல் ஷேகார்ச்சி கூறும்போது, “ஈரானை நோக்கி ஒரு தோட்டா பாய்ந்தாலும் அது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் பேரிடியாகி விடும்.
இன்றைய நிலையில் மத்தியக் கிழக்கில் சூழ்நிலை ஈரானுக்குச் சாதகமாக உள்ளது. எனவே விரோதி- குறிப்பாக இந்தப் பிராந்தியத்தில் அமர்ந்திருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் நெருப்புடன் விளையாட வேண்டாம், ஏனெனில் அமெரிக்காவின் நலன்கள் இந்தப் பிராந்தியத்தில் இதன் மூலம் கெட்டு நாசமாகிவிடும்.” என்று எச்சரித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தது என்பதை ஒரு லோக்கல் ஆணாதிக்க பாலியல் வக்கிர கொச்சைச் சொல்லுடன் (“cocked & loaded”) குறிப்பிட்டது வேறொரு சர்ச்சையைக் கிளப்பியது, ஆனால் கடைசியில் வேண்டாம் என்று உத்தரவை வாபஸ் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது
அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு வான் எல்லை விதிகளை மீறியதால் சுட்டோம் என்றது, ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. அமெரிக்க எண்ணெய் டாங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago