3-ம் ஆண்டைக் கடந்த ஏமன் உள்நாட்டுப் போர்: ஹவுத்தி ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி

By ஏஎஃப்பி

ஏமனில்  உள் நாட்டுப் போர் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் ஹவுத்தி ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ஏமனில் தலைநகர் சனாவில் இன்று (திங்கட்கிழமை) சவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள் சுமார் 10,000 பேர் பேரணி சென்றனர். பேரணியின்போது ஏமனின் கொடி மற்றும் ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக்கின் புகைப்படங்களை ஏந்திச் சென்றனர். 

பேரணியில் பங்கு கொண்ட  போராட்டக்காரர்  ஒருவர் கூறும்போது,  'மூன்று வருட ஆக்கிரமிப்பு' என்றார்.

ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாகக் கடந்த பத்து வருடங்களில் இல்லாத மோசமான பஞ்சத்தை ஏமன் எதிர்கொள்ளப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாகச் சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்