அமெரிக்கா, தென்கொரியா எங்களின் நல்லெண்ண முயற்சிக்கு ஒத்துழைத்தால் அணுஆயுத சோதனை விவகராம் தீர்க்கப்படும் என்று சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வடகொரிய அதிபர் கொன் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா வந்திருக்கிறார். கிம்மின் இந்தச் சீன பயணம் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை சினுவா உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டன. இந்த நிலையில் கிம்மின் சீனப் பயணத்தை சீன ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தின.
கிம் ஜோங் உன்னின் சீனப் பயணம் தொடர்பான புகைப்படங்களையும் சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பெய்ஜிங்கில் உள்ள ’Great Hall of the People’ அரங்கில் கிம் - ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. கிம்முடன் அவரது மனைவி ரி சோல் ஜூவும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இருவரும் இணைந்து சீனாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் முடிவில் இருநாட்டு உறவு குறித்தும், சமீபத்தில் கொரிய தீபகற்ப பகுதியில் நிலவிய பதற்ற நிலைக்குறித்து ஆலோசித்தனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சினுவா செய்தி ஊடகம், "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வடகொரிய அதிபர் கிம், கொரிய தீபகற்பத்தில் தற்போதைய நிலைமை முன்பைவிட சீராக உள்ளது. எங்களது நல்லெண்ண முயற்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, வடகொரியா ஒத்துழைப்பு அளித்தால் அணுஆயுத சோதனை விவகாரம் தீர்க்கப்படும் என்று கூறியிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன பயணம் குறித்து வடகொரிய அதிபர் கிம், "இதுதான் என்னுடைய முதல் சீனப் பயணம். வட கொரியா-சீனா நட்புணர்வை மதித்து நடப்பது எனது வாழ்வின் உன்னத கடமைகளில் ஒன்றாகும்” என்றார்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரிய அதிபராக கிம் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும். கிம்மின் இப்பயணம் சீனா - வடகொரியா இடையே குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட வழிச் செய்யும் என்று அரசியல் வல்லு நர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago