காசா - இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனர்கள் நடத்திய போராட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் "இஸ்ரேல் - காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்துப் பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 16 பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்தச் செயலை பாலஸ்தீன அரசு கடுமையாக கண்டித்துள்ளதுடன் சுமார் 500 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் அரசின் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ், "பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று ஐ.நா.சபையை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அரசுத் தரப்பில், "போரட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் இஸ்ரேல் எல்லையில் நுழைய வாய்ப்புள்ளதால் இந்தத் தாக்குதலை நடத்தினோம்" என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago